×

பைக் மீது கார் மோதி முதியவர் பலி

பாகூர், அக். 1: புதுச்சேரி அடுத்துள்ள நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கசாமி (72). சம்பவத்தன்று இவர் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் பைக்கில் தவளக்குப்பம் நோக்கி சென்றார். நோணாங்குப்பம் பாலத்தில் பைக் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியது. இதில் பைக்கில் இருந்து  கீழே விழுந்த 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கசாமி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது