×

தொடர் மழையால் கொசுத்தொல்லை அதிகரிப்பு

புதுச்சேரி, அக். 1:  புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையும், சிலநேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. இதனால் நகரப்பகுதியல் உள்ள காலிமனைகளில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. அதில் கொசு உற்பத்தி அதிகரித்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் உப்பளம் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அன்பழகன் எம்.எல்.ஏ.,  சுகாதாரத்துறை மலேரியா பிரிவு திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், இணை இயக்குனர் கணேசன், டெக்னிக்கல் அதிகாரி செந்தில் வேலவன், சுகாதார ஆய்வாளர் ஜீவானந்தம், சுகாதார உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோரை அழைத்து சென்று உப்பளம் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.தொகுதியில் உள்ள பாரதி வீதி, திருமூல நகர், உடையார் தோட்டம், அவ்வை நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கொசு மற்றும் லார்வாவை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...