×

ரேஷன்கடை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்

நெய்வேலி, அக். 1: குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வழுதலம்பட்டு ஊராட்சி அம்பலவாணன்பேட்டையில், ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் நியாய விலை கடை உள்ளது. இக்கடையில் சுமார் 300 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை இக்கடையின் மூலம் பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் கடை கட்டிடம் சுமார் 15 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இக்கட்டிடம் போதிய பராமரிப்பில்லாததால், சேதமடைந்து காணப் படுகிறது. கட்டிடத்தில், சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் கட்டிடத்தில் ஜன்னலுக்கான கம்பிகள் இல்லாததால், அதன் வழியாக எலிகள், கரப்பான்பூச்சிகள் சென்று ரேஷன் பொருட்களை சேதப்படுத்துகின்றன. எனவே, ரேஷன் கடையை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : building ,
× RELATED கேரள தமிழக எல்லையில் அமைந்துள்ள...