×

திருவந்திபுரத்தில் தேசிகர் பிரமோற்சவ விழா துவங்கியது

கடலூர், அக். 1:  கடலூர் திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் ஆண்டுதோறும் 12 நாள்  பிரமோற்சவ விழா கோலாகலமாக நடைபெறும்.  நேற்றுமுன்தினம் கோயிலில்   சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பெருமாள் மற்றும் தேசிகர் முன்னிலையில் காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தேசிகர் பிரமோற்சவ விழா தொடங்கியது. 12 நாள் நடைபெறும் விழாவில், தினமும் காலை மற்றும் மாலையில் பல்லக்கு, தங்க விமானம், சூரிய பிரபை, யாளி வாகனம், பிள்ளைகிளி வாகனம், சந்திர பிரபை வாகனம், வெள்ளி சிம்ம வாகனம், வெண்ணை தாழி சேவை, யானை வாகனம், சொர்ணாபிஷேகம், தங்க விமானம், வேட்டை உற்சவம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது வரும் 7ம் தேதி காலை  தேர்த்திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் நவராத்திரி ஒன்பதாம் நாள் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பிரமோற்சவ விழாவின் முக்கிய விழாவான வரும் 8ம் தேதி திருவோண நட்சத்திரத்தில், தேசிகர் ரத்னாங்கி சேவை ஔடதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் சன்னதியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. பின்னர் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், ராமன், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், தாயார் ஆண்டாள், ஆழ்வார் உள்ளிட்ட பல்வேறு  சாமி சன்னதிகளுக்கு சென்று வழிபடுகிறார். பின்னர் மாலையில் சாமி வீதி உலா உற்சவ தீர்த்தவாரி பெருமாள் தாயார் திருமுறை உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் கண்ணாடி பல்லக்கில் வீதி உலா நடைபெறுகிறது. 12ம் நாள் உற்சவத்தில் தேசிகர் சாமி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Tags : ceremony ,Desikar Pramodsavam ,Thiruvananthapuram ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா