×

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் சிசுவுடன் தாய் மரணம் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விருதுநகர், அக். 1: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் சிவகாசி தனியார் மருத்துவமனையில், தவறான சிகிச்சையால் தாய், சிசு மரணத்திற்கு காரணமான பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பினர். இது குறித்து சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த காளிராஜன் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:எனக்கும், சங்கரேஸ்வரி என்பவருக்கும் கடந்த 2011ல் திருமணம் நடந்தது. கடந்த 2012 ஜூன் 25ல் முதல் பெண் குழந்தை பிறந்தாள். இரண்டாவது குழந்தைக்கான பிரசவம், சிவகாசி சபரிசாய் மருத்துவமனையில் கடந்த மாதம் 2ம் தேதி நடந்தது. அங்குள்ள பெண் டாக்டரின் தவறான சிகிச்சையால், எனது மனைவியும் குழந்தையும் இறந்தனர். இது குறித்து கடந்த மாதம் 8ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தேன். மனு மீது சுகாதாரப் பணிகள் இணை இயக்குநரை நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை. தொடர்ந்து செப்.16ல் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. பெண் மருத்துவர் அரசின் இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டு, தனியார் மருத்துவமனையை நடத்தி வருகிறார். எனது மனைவி, குழந்தை உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். டாக்டர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : fetus ,death doctor ,hospital ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...