×

கே.கே.பட்டி சுகாதார நிலையத்தில் அகச்சிவப்பு கதிர் மூலம் மூட்டுவலிக்கு சிகிச்சை

கம்பம் அக்.1: கம்பம் அருகே உள்ள கே.கே.பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  தீராத மூட்டு வலிகளுக்கு சித்த வைத்திய முறைப்படி அகச்சிவப்பு கதிர் சிகிச்சை மற்றும் மெழுகு ஒத்தடம் மூலம் சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் கேகே பட்டி அரசு மருத்துவமனையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த வைத்திய பிரிவு உள்ளது. இங்கு 60 வயதுக்கு மேல் உள்ள மூத்தகுடிமக்களுக்கு  மூட்டு வலிக்கு மெழுகு ஒத்தடம் கொடுத்து அகச்சிவப்பு கதிர் சிகிச்சை அளிக்கின்றனர். இதுகுறித்து சித்த மருத்துவர் சிராஜூதீன் கூறுகையில், கேகே.பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் நாள்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு மூட்டு வலிகளுக்கு சிறப்பு சிகிச்சையாக மெழுகு ஒத்தடம் பூசப்பட்டு அகச்சிவப்புக் கதிர் சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையினால் பெரும்பாலும் மூட்டு வலி குறையத் தொடங்கிவிடும். அதேபோல சதை வலி குறைந்து தொடர்ந்து ஒரு வாரம் சிகிச்சை எடுத்தால் பூரணமடையலாம். ஜவ்வு விலகுதல், எலும்புத் தேய்மானம் ஏற்பட்டு இருந்தால் அவர்களுக்கு 40 நாள் தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்தால் குணமடையலாம் என்று கூறினார்.

Tags : KK Patti Health Center ,
× RELATED தேனி தொகுதியில் சிவிஜில் செயலி மூலமாக 24 புகார்கள் மீது விசாரணை