×

குமுளி மலைச்சாலை வழித்துணை மாதா கோயில் சப்பரபவனி

கூடலூர், அக். 1: தேவமாதா பிறந்தநாள் விழா கொண்டாட்டமாக குமுளி மலைச்சாலை வழித்துணை மாதா கோயில் தேர்ப்பவனி நடைபெற்றது. கிறிஸ்தவர்களின் விழாவான தேவமாதாவின் பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் கடந்த ஆகஸ்ட் இறுதியில் தேவாலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கம்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் ஆக.31ல் பங்குத்தந்தை இளங்கோ தலைமையில் மாதாவின் திருஉருவம் பொறித்த திருக்கொடியை தேவாலய வளாகத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில், கடந்த ஒருமாதமாக கம்பம், கூடலூர், ஆங்கூர்பாளையம், லோயர்கேம்ப், நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி இறைமக்கள் சிறப்பித்த திருப்பலியை சிறப்பு அழைப்பாளர்களான அருட்தந்தைகள் தலைமையேற்று நடத்தினர். நிறைவுநாளாக நேற்று முன்தினம் லோயர்கேம்பிலிருந்து, குமுளி மலைச்சாலையில் உள்ள வழித்துணைமாதா கோயில் வரை சப்பரபவனி நடைபெற்றது. இப்பகுதியைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கம்பம் பங்குத்தந்தை இளங்கோ தலைமையில் அருட்பணியாளர்கள் ஜீவா, சத்யாயப்பர் கலந்து கொண்ட திருப்பலி நடைபெற்றது. லோயர்கேம்ப் எஸ்ஐ உதயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Kumuli Hill Road Mata Temple ,
× RELATED பென்னிகுக் மணிமண்டபத்துக்கு பூட்டு...