பள்ளியில் முகாம்

சின்னமனூர், அக்.1: சின்னமனூர் அருகே டி.சிந்தலைச்சேரி அமல அன்னை மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலத் திட்டம், சென்னை பள்ளி கல்வி இயக்குனரகம், தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் பொம்மிநாயக்கன் பட்டியில் ஒரு வார சிறப்பு முகாம் நடைபெற்றது.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரேணுகா தேவி தலைமை வகித்தார். உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி முன்னிலை வகித்தார். அமல அன்னை மேல்நிலை பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் அன்புச்செல்வன் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா, மாவட்டத் தொடர்பு அலுவலர் நேருராஜன், சிறப்புரையாற்றினார். முகாமின் நோக்கம் குறித்து ஆசிரியர் ஆரோக்கியசாமி பேசினார். பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்கள் சகாயராஜ், சரவணகுமரன், விடியல் காசிராஜ் முத்தழகு, பாண்டியன் ஆகியோர் பேசினர். முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சிலுவை மைக்கேல்ராஜ், திட்ட அலுவலர் மணிமாறன் செய்திருந்தனர்.

Tags : school ,
× RELATED கடையநல்லூர் பள்ளியில் இயற்கை மருத்துவ தினவிழா