×

வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

திருப்புத்தூர், அக்.1: திருப்புத்தூர் பகுதியின் வழியாக செல்லும் தேசிய நெஞ்சாலையின் இணைப்பு ரோடுகளில் சோலார் விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர்-மானாமதுரை வரை தேசிய நெஞ்சாலை ரோடு திருப்புத்தூர் வழியாக செல்கிறது. இதில் பல முக்கிய ஊர்களுக்கு செல்லும் இணைப்பு ரோடுகள் உள்ளன. இதில் பெரும்பாலான இணைப்பு ரோடுகள் ஊருக்குள் செல்வதற்கு இரண்டு முதல் நான்கு கிலோ மீட்டருக்கு முன்னதாகவே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தொடங்குகிறது. இந்த இடங்களில் வேகத்தடைகள் போடுவது கிடையாது.  இரவு நேரங்களில் வாகனங்கள், டூவீலர்கள் செல்லும் போதும் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதே போன்று திருப்புத்தூரில் இருந்து வாணியங்காடு, கண்டரமாணிக்கம், பட்டமங்கலம் செல்லும் ரோட்டில் தென்மாபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை இணைப்பு ரோடு வருகிறது. இதில் 3 இணைப்பு ரோடுகள் இருக்கின்றன. இந்த இணைப்பு ரோடுகளின் சந்திப்புகளில் ஊரின் பெயர் பலகைகளும் இல்லை. மின் விளக்குகளும் இல்லை. இதனால் நெடுஞ்சாலைகளில் அதிக வேகமாக வரும் வாகனங்கள் இணைப்பு ரோடுகளின் சந்திப்புகளில் வரும் டூவீலர் மற்றும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அரசு நெடுஞ்சாலை இணைப்பு ரோடுகளில் மின் விளக்குகள் அல்லது சோலார் விளக்குகள் பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...