×

அரசு கல்லூரியில் 500 மரக்கன்றுகள்

காரைக்குடி, அக்.1: காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ், ரெட் கிராஸ் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் திருச்செல்வம் தலைமை வகித்து திட்டத்தை துவக்கிவைத்தார். லயன்ஸ் சங்க தலைவர் வைரவன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் குமார், பாரதிதாசன், மண்டல தலைவர் பழனிவேல், லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் ரத்னசாமி, லயன்ஸ் கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி வளாகத்தை சுற்றி 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

Tags : Government College ,
× RELATED அந்தியூரில் காற்றுடன் கனமழை 25 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம்