×

சக்கரக்கோட்டையில் என்எஸ்எஸ் முகாம் புதர்களை அகற்றிய மாணவர்கள்

பரமக்குடி, அக்.1: சக்கரக்கோட்டையில் நடந்த என்எஸ்எஸ் முகாமில், ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஊருணி சுத்தப்படுத்துதல் துவங்கி புதர்களை அகற்றி சீரமைப்பு வரையிலும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியின் என்எஸ்எஸ் முகாம் சக்கரக்கோட்டை எம்எஸ்கே நகரில் ஒரு வாரம் நடந்தது. பள்ளி செயலர் குமுரன் சேதுபதி தலைமை வகித்தார். தலைமையாசிரியை அருண்மொழி, முகாம் அலுவலர் பாலசுப்பிரமணியன், உதவி அலுவலர்கள் கிருஷ்ணகுமார் பாண்டியன், வினோத்குமார், முதுகலை ஆசிரியர்கள் சரவணக்குமார், சந்தான கிருஷ்ணன் மற்றும் ரவி, மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிராமத்தில் பல்வேறு இடங்களில் மண்டிக் கிடந்த புதர்கள் அற்றப்பட்டு, சீரமைக்கப்பட்டது, மரங்கள் நடப்பட்டன. டெங்கு, பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி, போட்டி தேர்வுகளுக்கான, போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இலவச கால்நடை மருத்துவ முகாம், யோகா பயிற்சி என பல்வேறு பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் அய்யணன், மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இறுதி நாளில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags : NSS ,Wheelock Fort ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்