×

புனித வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி விழா

இடைப்பாடி, அக்.1: இடைப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் புனித வேளாங்கண்ணி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் ஆலயத்தின் வெள்ளிவிழா திருப்பலி நடந்தது. இரவு தேர்பவனி நடந்தது. வேளாங்கண்ணி மாதாவின் சிலையை பெண்கள் தூக்கிக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.  இந்நிகழ்ச்சிக்கு பச்சாம்பாளையம் இறையரசு தியான மையம் இயக்குனர் விஜய் அமல்ராஜ் தலைமை வகித்தார். குருக்கள் ஜோசப் லாசர், அருள்ராஜ், பெரிய நாயகம், மதலை முத்து மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags : St. Velankanni Temple Terpavani Festival ,
× RELATED வீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு