×

இளம்பிள்ளை அருகே வீடியோவில் சிக்கிய போஸ்ட்மேன்

இளம்பிள்ளை, அக்.1:  இளம்பிள்ளை அருகே தபால் விநியோகிக்க, போஸ்ட்மேன்  பணம் வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பகுதியில், போஸ்ட்மேன் ராஜசேகர் என்பவர் பொதுமக்களுக்கு தபால்களை வழங்குவதில் தாமதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. பொதுமக்களிடம் தபால்களை தாமதப்படுத்தி வழங்கும் பொழுது முன்கூட்டியே வழங்கியது போல், கையெழுத்துப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், தபால் வழங்கியதற்கு லஞ்சமாக பணம் பெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் இளம்பிள்ளை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Postman ,Ilampillai ,
× RELATED சினிமாவை மிஞ்சிய நடுரோட்டில் நடந்த...