×

வீராணம் அருகே நடுப்பகுதியில் குலை தள்ளிநிற்கும் வாழைமரம்

சேலம், அக்.1: சேலம் வீராணம் அருகே வாழை மரத்தின் நடுப்பகுதியில் இருந்து குலைதள்ளி இருப்பதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். சேலத்ைத அடுத்த வீராணம் பள்ளிப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஷேக்அமீர். அரசு ஊழியரான இவர், தனது வீட்டுத் தோட்டத்தில் வாழை, மாதுளை, எலுமிச்ைச, சப்போட்டா மற்றும் சீத்தா பழங்களை பரியிட்டுள்ளார். இதில் ஷேக்அமீர் சாகுபடி செய்துள்ள வாழையில் இலைகள் மட்டும் மேற்பகுதியில் வளர்ந்திருக்க, குலைகள் நடுப்பகுதியில் தண்டு விட்டு வளர்ந்திருப்பது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ஷேக்அமீர் குடும்பத்தினர் கூறுகையில், ‘ஒரு வருடத்திற்கு முன்பு தோட்டத்தில் வாழை நட்ேடாம். சில மாதங்களுக்கு முன்பு இலைகள் மட்டும் செழித்து வளர்ந்தது. உயரமாக வளர்ந்த வாழையில், குலை தள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. இந்நிலையில், வாழை மரத்தின் நடுப்பகுதியில் இருந்து திடீரென பழங்களுக்கான பூ பூத்தது. இந்த பூக்கள், உதிர்ந்து விடும் என நினைத்தோம். ஆனால், பூக்கள் காயாகி தற்போது வாழை குலைதள்ளி நிற்கிறது,’ என்றனர்.

இது குறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பழங்களுக்காகவே பிரதானமாக  பயிரிடப்படும் வாழையில், நிலைக்குத்தாக உள்ள பகுதி ஒரு போலித்தண்டாகும். சில இன வாழைகளுக்கு போலித்தண்டு 2ன் தொடக்கம் 8 மீட்டர் உயரம் வளரக் கூடியது. ஒவ்வொரு போலித்தண்டும் ஒவ்வொரு குலை வாழைப்பழங்களைத் தரவல்லது. வாழைக்குலை ஈன்ற பின்பு போலிதண்டு மறைந்து, இன்னொரு போலித்தண்டு அதனிடத்தைப் பிடிக்கிறது. அந்த வகையில் இந்த வாழையின் நடுப்பகுதியில் இருந்து குலை தள்ளியிருக்க வாய்ப்புள்ளது,’ என்றனர்.

Tags : valley ,
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...