×

சுகாதாரத் துறை இணை இயக்குனர் பொறுப்பேற்பு

சேலம், அக். 1:சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனராக நிர்மல்சன் பொறுப்பேற்று கொண்டார். சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநராக பணியாற்றி வந்த பூங்கொடி, கரூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய வந்த நிர்மல்சன், சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை கடந்த 28ம்ேததி ெவளியிட்டது. இதையடுத்து சேலம் வந்த நிர்மல்சன், பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகளும், ஊழியர்களும் வாழ்த்து தெரிவித்தனர். நிர்மல்சன் சில ஆண்டுகளுக்கு முன்பு, சேலம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : co-director ,Department of Health ,
× RELATED வெளிநாடுகளில் இருந்து வருவோர்...