×

அடிப்படை வசதி கோரி ஆலம்பட்டி மக்கள் மனு

திண்டுக்கல், அக். 1: நிலக்கோட்டை ஆலம்பட்டி மக்கள் அடிப்படை வசதிகள் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.நிலக்கோட்டை அருகே ஆலம்பட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்கள் ஊரில்1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் குடிநீர், கழிப்பறை, மயானம் என எந்த அடிப்பதட வசதிகளும் செய்து தரப்படவில்லை. இப்போதுள்ள அங்கன்வாடி கட்டிடம் மிகவும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது.இதுகுறித்து நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிராமசபை கூட்டங்களில் மனுக்கள் அளித்தோம். ஆனால் அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் ஊருக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன் புதிய அங்கன்வாடி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. முன்னதாக அனைவரும்கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி வந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : facilities ,
× RELATED குமரி அரசு மருத்துவக்கல்லூரியில்...