எலச்சிபாளையம் மேற்கு ஒன்றியத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்செங்கோடு, அக்.1: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ வழிகாட்டுதலின்படி, எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராசு தலைமையில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரமேஷ் முன்னிலையில் இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மோளிப்பள்ளி ஊராட்சி, நல்லிபாளையம் ஊராட்சி, 85.கவுண்டம்பாளையம் ஊராட்சி, கிளாப்பாளையம் ஊராட்சி, 87.கவுண்டம்பாளையம் ஊராட்சி, குப்பாண்டபாளையம் ஊராட்சி, சத்தியநாயக்கன்பாளையம் ஊராட்சி, போக்கம்பாளையம் ஊராட்சி, மண்டகாபாளையம் ஊராட்சி, உஞ்சனை ஊராட்சியில் நடைபெற்ற முகாம்களில் இளைஞரணி அமைப்பாளர் ராஜா மற்றும் கிளை நிர்வாகிள் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.
இதில், ஏராளமானோர் ஆர்வத்துடன் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

Tags : DMK Youth Membership Admission Camp ,
× RELATED பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை...