×

பிள்ளாநல்லூரில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா

ராசிபுரம், அக்.1: பிள்ளாநல்லூர் பேரூராட்சி 15வது வார்டு ஜெயலட்சுமி நகர் பகுதியில், 2018-19ம் ஆண்டு மாநில பேரிடர் நிவாரண நிதி திட்டத்தின் கீழ், 45 லட்சம் மதிப்பீட்டில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தனர். நிகழச்சியில் முன்னாள் எம்.பி. சுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் அரசு அதிகாரிகள், பேரூராட்சி பணியாளர்கள், முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Opening Ceremony of Groundwater Reservoir Tank ,Pillanallur ,
× RELATED ராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி