×

திருச்செங்கோட்டில் வெறிநாய் தடுப்பூசி முகாம்

திருச்செங்கோடு, அக்.1: உலக வெறிநாய் தினத்தையொட்டி, திருச்செங்கோடு கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கான இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடந்தது. ரோட்டரி சங்கம், ஆவின் நிறுவனம் மற்றும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ரோட்டரி சங்கத் தலைவர் பிரகாசம், செயலாளர் வாட்டர் பிரகாஷ், திருச்செங்கோடு கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் மணிசேகரன், டாக்டர் முத்துவேல், டாக்டர் சங்கர் மற்றும் ஆவின் நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Rabies vaccination camp ,Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்