×

வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு பனைவிதை வழங்கல்

சேந்தமங்கலம், அக்.1: வேளாண் துறை சார்பில், மேலப்பட்டி விவசாயிகளுக்கு பனைவிதை வழங்கப்பட்டது. சேந்தமங்கலம் வட்டாரம் மேலப்பட்டி கிராமத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் சார்பில், ஐஐஐ திட்டத்தின் கீழ் பனை விதைகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் இந்திராணி தலைமை தாங்கினார். எம்எல்ஏ சந்திரசேகரன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பனை விதை மற்றும் மண் வள அட்டை, இடுபொருட்களை வழங்கினார். இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானாவாரி திட்டத்தின் பயிற்சி முகாம் நடந்தது.

இதில், அரசு மானியம், பிரதமரின் ஓய்வூதியம், கூட்டுப்பண்ணை திட்டம், மண் அட்டை மூலம் விவசாயிகள் அடையும் பயன், பனை விதைகளை நடவு செய்து நீர் சேமித்தல் குறித்து விளக்கி கூறப்பட்டது. இக்கூட்டத்தில் வேளாண் பயிற்சி நிலைய அலுவலர் அசோகன், வேளாண் அலுவலர் சந்திரசேகரன், உதவி வேளாண் அலுவலர்கள் செங்கோட்டுவேல், பாண்டித்துரை, உதவி விதை அலுவலர் கோவிந்தசாமி உட்பட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Agriculture Department ,
× RELATED திருச்சி மாநகரில் இன்றும், நாளையும் குடிநீர் சப்ளை நிறுத்தம்