×

டெங்கு காய்ச்சல் பாதித்த கிராமத்தில் மருத்துவ முகாம்

சூளகிரி, அக்.1:   டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட கோவிந்தபுரம் கிராமத்தில் மருத்துவ முகாம் நடந்தது. இதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சூளகரி தாலுகா உத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி ரகு(22). கடந்த வாரம் இவர் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பின்னர் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு  டெங்கு காய்ச்சல் இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இது குறித்து சுகாதார துறையினர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், நேற்று விவசாயி ரகுவின் கிராமமான கோவிந்தபுரத்தில், மாவட்ட பூச்சி நிலையத்தை சேர்ந்த மாரியப்பன், சூளகிரி வட்டார சுகாதார குழுவினர், உத்தனப்பள்ளி மருத்துவ குழுவினர் மருத்துவ முகாம் நடத்தினர். அப்போது, கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்தும், கிராமம் முழுவதும் குளோரின் பவுடர், கொசு மருந்து தெளித்தல், தேங்காய் சிரட்டை உள்ளிட்டவற்றை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு ெசய்தார்.

Tags : camp ,village ,
× RELATED சிறப்பு ரத்ததான முகாம்