×

நடுவனப்பள்ளி கிராமத்தில் கோழிப்பண்ணை கழிவால் நோய் பரவும் அபாயம்

வேப்பனஹள்ளி, அக்.1: வேப்பனஹள்ளி அருகே கோழி கழிவுகள் கொட்டப்பட்டு ஈக்களால் பாதிக்கப்பட்ட நாடுவனப்பள்ளி கிராமத்தில் காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வேப்பனஹள்ளி ஒன்றியம் நாடுவனப்பள்ளி கிராமத்தின் அருகே, தனியார் கோழிப்பண்னையினர் கழிவுகளை கொட்டியிருந்தனர். இதிலிருந்து துர்நாற்றமும், ஈக்களும் நாடுவனப்பள்ளி கிராமத்தை சூழ்ந்துள்ளது. கழிவுகளை கொட்ட கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கோழிப்பண்னை நிர்வாகத்தினர் கழிவுகளை அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இக்கிராமத்தில் காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காய்ச்சல் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலருக்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே அதிகாரிகள் காய்ச்சல் பாதிப்புகளை தடுக்கும் வகையில், துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village ,Naduwannappalli ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...