×

உத்தனப்பள்ளி பகுதியில் கடைகளில் அதிரடி சோதனை

சூளகிரி, அக்.1: சூளகிரி அருகே உத்தனப்பள்ளி பகுதியில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், பிடிஓ ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் கடை கடையாக சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளில், பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக, கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு,  அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதன்பேரில், உத்தனப்பள்ளி பகுதியில் உள்ள பேக்கரி கடைகள், டீ கடைகள் மற்றும் பலகார கடைகள், ஓட்டல் கடைகளில் அதிரடி சோதனை நடைபெற்றது.

இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் சுகாதார குழுவினர் ஈடுபட்டனர். ஒரேநாளில் சுமார் 50 கடைகளில் சோதனை நடத்தினர்.
இதில், கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதற்கு மாற்றாக துணிப்பைகளை அதிகாரிகள் வழங்கினர். மேலும், காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

Tags : Action test ,stores ,Uthanapalli ,area ,
× RELATED குட்கா விற்பனை செய்த 3 மளிகை கடைகளுக்கு சீல்