×

கடத்தூர் அருகே பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

கடத்தூர், அக்.1: கடத்தூர் அருகே லிங்கநாயக்கனஅள்ளியில் பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கும் சுகாதார வளகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர். கடத்தூர் அருகே லிங்கநாயக்கனஅள்ளியில் ஊராட்சியில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில், தனிநபர் கழிப்பிட வசதி இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஊராட்சித் துறை சார்பில், கடந்த 2011-2012ம் ஆண்டு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து, 6மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. பின்னர் தண்ணீர் வசதி இல்லாமல், கடந்த 6ஆண்டுகளாக சுகாதார வாளகம் பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை என மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். எனவே சுகாதார வளாகத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : sanctuary ,Kadathur ,
× RELATED கோடியக்கரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்