×

பாலக்கோட்டில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை

பாலக்கோடு, அக்.1: பாலக்கோடு பேரூர்  திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. பாலக்கோடு தெற்கு ஒன்றியம், பாலக்கோடு பேரூர் திமுக இளைஞர் அணி சார்பில்  இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் முகாம், பி.செட்டிஅள்ளி, எர்ரனஅள்ளி, ஜெர்தலாவ், கரகதஅள்ளி, பேளாரஅள்ளி, காட்டம்பட்டி, பென்னாகரம் சட்டமன்ற ஊராட்சிகள் கம்மாளப்பட்டி, காட்டம்பட்டி, மோதுகுலஅள்ளி, பி.கொல்லஅள்ளி, புலிகரை, செல்லியம்பட்டி, பூகானஅள்ளி, பாடி, செக்கொடி ஆகிய ஊராட்சிகளில், கடந்த 28ம் தேதி பாலக்கோட்டில், மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில் முதற்கட்டமாக 1000 இளைஞர்கள் உறுப்பினராக சேர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அமைப்பாளர் செல்வராஜ் வரவேற்றார். பென்னாகரம் எம்எல்ஏ இன்பசேகரன், தர்மபுரி எம்பி செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் சூடபப்ட்டி சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Balakot ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...