×

மொரப்பூர் அருகே தாசிரஅள்ளி ரயில்வே பாலத்தின் அடியில் மழைநீர் தேக்கம்

அரூர், அக்.1: மொரப்பூர் அருகே தாசிரஅள்ளி ரயில்வே பாலத்தில் அடியில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மொரப்பூர் வழியாக தாசிரஅள்ளி செல்லும் பாதையில் ரயில்வே பாலம் உள்ளது. இந்த வழியாக சிந்தல்பாடி, ராமியம்பட்டி, தென்கரைகோட்டை, தொங்கனூர், வகுத்தப்பட்டி, கடத்தூர், அரூர் உள்பட பல ஊர்களுக்கு பாலத்தின் அடியில் உள்ள பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அரூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், இந்த பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே பாலத்தின் அடியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும்,  மழைநீர் தேங்காமல் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rainwater reservoir ,railway bridge ,Morapur ,
× RELATED கொல்லம்பாளையம் ரயில்வே பாலத்தில் போக்குவரத்து நெரிசல்