×

இலவச மருத்துவ முகாம்

திருப்பூர்,அக்.1:  தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின பிறந்தநாளை  முன்னிட்டு, திருப்பூர் மத்திய அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை,  ஸ்ரீ குமரன் மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட தமாகா ஆகியவை  சார்பில், திருப்பூர் மாநகராட்சி 57வது டிவிஷன் பகுதியில் இலவச மருத்துவ  முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர்  பத்மநாபன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில  செயலாளர் சேதுபதி, மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு  மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள்  கலந்துக்கொண்டனர். முன்னதாக, அப்பகுதியில் கட்சி கொடியை விடியல்  சேகர் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில், திருப்பூர் மாநகர் மாவட்ட  இளைஞரணி பொறுப்பாளர் மேத்தா கந்தசாமி, தங்கவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tags : Free Medical Camp ,
× RELATED உலக மகளிர் தினத்தையொட்டி சீஷா,...