×

பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது

ஈரோடு, அக்.1:  ஈரோட்டில் பிரபல வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு அடுத்த பச்சப்பாளி ஓம்காளியம்மன் கோயில் வீதியை சேர்ந்த கோவிந்தன் மகன் தமிழரசன் (26). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஈரோடு ரிங் ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த மர்மநபர் ஒருவர் தமிழரசனை வழிமறித்து, கொலை மிரட்டல் விடுத்து அவரிடம் இருந்த ரூ.350ஐ பறித்து சென்றார். இதுகுறித்து தமிழரசன் ஈரோடு தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஈரோடு - கரூர் ரோடு பாலதண்டாயுதம் வீதியை சேர்ந்த பூபதி என்ற பிரபாகரன் (29) என்பவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று சிறையில் அடைத்தனர்.  மேலும் கைதான பூபதி மீது ஈரோடு டவுன், வீரப்பன் சத்திரம், கருங்கல்பாளையம், சூரம்பட்டி, கோபி உள்ளிட்ட பகுதியில் வழிப்பறி, திருட்டு, அடிதடி உட்பட 21வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.

Tags : celebrity gangster ,
× RELATED பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது