×

சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

ஊட்டி, அக். 1: காலாண்டு விடுமுறை வந்த போதிலும் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவானதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி விடுமுறை என தொடர் விடுமுறை ஒரு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இது போன்று தொடர் விடுமுறை நாட்களில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால், கடந்த மாதம் பெய்த மழையால் தமிழக - கேரள மாநில சாலைகள் பாதித்தன. இதனால், கேரள மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக குறைந்துவிட்டது. அதேசமயம், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டமும் தற்போது குறைந்துள்ளது. அதேபோல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டமும் குறைந்தே காணப்படுகிறது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால், வியாபாரிகள் மற்றும் தோட்டக்கலைத்துறையினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Tags : Tourist arrivals ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...