×

பியூட்டி பார்லர் பெண் தற்கொலை வழக்கில் மர்மம்

கோவை, அக்.1: சூலூர் பியூட்டி பார்லர் ஊழியர் தற்கொலை வழக்கில் மர்மம் உள்ளதால் உரிய விசாரணை நடத்தக்கோரி அவரது உறவினர்கள் கோவை கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் கலெக்டர் ராசாமணி தலைமையில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு போயர் இன ஒற்றுமை சங்கம் சார்பில் கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில், சூலூரை சோ்ந்த பத்மநாபன் என்பவரது மகள் சோபனா (25). பாப்பம்பட்டி பிரிவில் உள்ள பியூட்டி பார்லர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி மர்மமான முறையில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன் சோபனாவின் மரணத்திற்கு நீதிகேட்டு வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

*. இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை சார்பில் மாவட்ட செயலாளர் பாலசிங்கம் அளித்த மனுவில்,
கோவை மாநகராட்சி 40வது வார்டுக்குட்பட்ட ஆவாரம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை சட்டவிதிகளை மீறி 24 மணி நேரமும் கடைகளில் மதுபானம் விற்கப்பட்டு வருகிறது இதனால் பள்ளி கல்லூரி மாணவிகள் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் எனவே இந்த கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் ; 2 பேர் கைது