×

காந்தி ஜெயந்தி தினத்தில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு

கோவை, அக். 1: மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறியிருப்பதாவது :ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி ‘காந்தி ஜெயந்தி’ கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு, கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகளை மூடும்படியும், அன்றைய தினம் கோவை மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் உக்கடம், சிங்காநல்லூர், துடியலூர் ஆடு அறுவைமனை, சத்தி ரோடு, போத்தனூர் மாடு அறுவை மனை, மாநகராட்சியில் கீழ் இயங்கும் 10 மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறியுள்ளார்.

Tags : Meat shops ,Gandhi Jayanthi Day ,
× RELATED காஞ்சிபுரத்தில் முழு ஊரடங்கை மீறி...