×

பெருந்துறையில் 230 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

பெருந்துறை, அக். 1:   பெருந்துறையில் 230 கர்ப்பிணி பெண்களுக்கு, சீர் வரிசைகளுடன் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் சார்பில் பெருந்துறை வட்டார அளவில் சமுதாய வளைக்காப்பு விழா பெருந்துறையில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில் பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டு தனது சொந்த செலவில் அறுசுவை உணவு வழங்கினார். விழாவிற்கு பெருந்துறை வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் மோகனவித்யா  தலைமை தாங்கினார். சென்னிமலை வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் விஜயலட்சுமிதேவி வரவேற்றார். பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர்.பேபி முன்னிலை வகித்தார்.

இதில், பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம்  கலந்துகொண்டு வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து 230 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு உணவு பரிமாறினார். இந்நிகழ்ச்சியில் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அருண், வித்யாலட்சுமி, போஷன் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் சவுந்தரராஜன், திட்ட உதவியாளர் சந்தியா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மேற்பார்வையாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Perundurai ,
× RELATED ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு...