×

குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒதுக்க வலியுறுத்தல்

ஈரோடு, அக். 1:  குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்யக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர்.மொடக்குறிச்சி சின்னியம்பாளையம் எம்ஜிஆர்., நகரில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் மனை எதுவும் இல்லை. இந்நிலையில் சின்னியம்பாளையத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் சுமார் 96 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த வீடுகளில் தங்களுக்கும் வீடு ஒதுக்க வேண்டும் என எம்ஜிஆர்., நகர் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமானோர் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Cottage Transfer Board ,
× RELATED பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்