×

கால்நடை உதவி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக். 1:  கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் பணிபாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோடு ஸ்டேட் பேங்க் ரோட்டில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் செல்வம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு கால்நடை பன்முக மருத்துவமனையில் கடந்த 28ம் தேதி பணியில் இருந்த டாக்டர் சிவக்குமார் என்பவரை சூரம்பட்டி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் வெள்ளாட்டை சிகிச்சைக்காக கொண்டு வந்தபோது தகராறு செய்துள்ளார்.

அப்போது தகாத வார்த்தையால் பேசி டாக்டர் சிவக்குமாரை சராமரியாக தாக்கியுள்ளார். இதை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் பணியில் இருந்த டாக்டரை தாக்கியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும் பணியில் இருக்கும் கால்நடை மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் ஈரோடு கோட்ட செயலாளர் பிரபு, மாவட்ட இணை செயலாளர் சத்தியமூர்த்தி, கோபி கோட்ட செயலாளர் திருநாவுக்கரசு, கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஜெகதீசன், மோகன்ராஜ், சேலம் மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Veterinary Assistants Demonstration ,
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை