கரூரில் நாளை மறுதினம் முன்னாள் படைவீரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கரூர், அக். 1: முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது குறித்து கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டம் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறு தினம்(3ம் தேதி) மாலை 4 மணிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடத்தப்படவுள்ளது.அன்றைய தினம் கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சார்ந்தோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் வாயிலாக மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : meeting ,Veterans Correctional Day ,Karur ,
× RELATED அரசு ஊழியர் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்