×

அரியலூரில் சிறப்பு மருத்துவ முகாம்

அரியலூர், அக். 1: அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் வினய் துவக்கி வைத்தார். மருத்துவ முகாமில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது. முகாமில் 279க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 34 பேர் மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். துணை இயக்குனர் சுகாதார பணிகள் ஹேமசந்த் காந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், வட்டார மருத்துவ அலுவலர்கள் அனிதா, உமா மகேஷ்வரி உள்ளி–்ட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Special Medical Camp ,Ariyalur ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...