ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி

தா.பழூர், அக். 1: தா.பழூர் ஒன்றியத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் கடைசி நாளான நேற்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் போஷனபியான் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சாபிகேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் ஒன்றிய ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று ஒன்றிய அலுவலகத்தில் நிறைவடைந்தது. அங்கன்வாடி பணியாளர்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானப்பிரகாசம், திட்ட உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பெரியபாளையத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி