×

கோவிந்தபுத்தூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

தா.பழூர், அக். 1: கோவிந்தபுத்தூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தபுத்தூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. முகாமில் புரந்தான் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். கோவிந்தபுத்தூர் கிராம புறங்களில் உள்ள தெருக்களில் தூய்மை செய்தல், பொது இடங்களில் மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளை பள்ளி மாணவர்கள் மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள கங்காஜடேஸ்வரர் கோயில் வளாகத்தில் செடி, கொடிகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் அக்னி சிறகுகள் அமைப்பு சார்பில் கோவிந்தபுத்தூர் இளைஞர்கள் பங்கேற்று மாணவர்களுடன் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

அரும்பாவூரில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரம்பலூர், அக்.1:பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்தில் உள்ள அரும்பாவூர் பேரூராட்சியில் திமுக பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில், ஒன்றிய செயலாளர் நல்லதம்பி முன்னிலையில் இளைஞரணி உறுப்பினர்கள் சேர்த்தல் முகாம் நடந்தது. முகாமை மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பூலாம்பாடி பேரூராட்சியில் பேரூர் செயலாளர் சேகர் தலைமையில் ஒன்றிய செயலாளர் நல்லதம்பி தலைமையில், மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Country Welfare Project Camp ,Govindaputhur Village ,
× RELATED ஆர்.கொமாரபாளையத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்