×

மாவட்ட வன அலுவலர் ஆய்வு : செம்பாக்கம் வனத்துறை சாலையை

திருப்போரூர், அக்.1: செம்பாக்கம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையை, சீரமைப்பதற்கான ஆட்சேபணையில்லா சான்றிதழ் வழங்குவதற்காக மாவட்ட வன அலுவலர் ஆய்வு செய்தார். திருப்போரூர் - செங்கல்பட்டு இடையே  வனப்பகுதிகளுக்கு இடையே செம்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. செம்பாக்கம்  கிராமத்துக்கு செல்ல மெயின்ரோட்டில் இருந்து இணைப்பு சாலை உள்ளது. இந்த  இணைப்பு சாலையில் சுமார் 400 மீட்டர் தூரத்துக்கு வனப்பகுதி அமைந்துள்ளது. சமீபத்தில் செம்பாக்கத்தில் இருந்து அச்சரப்பாக்கம் வரை சாலை அமைக்கும் பணி  நடந்தது. இதில் வனத்துறை ஆட்சேபணை பகுதியான இடத்தில் சாலை அமைக்கும் பணி பாதியில்  நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சாலை அமைக்க  ஆட்சேபணை இல்லா சான்றிதழ் இருந்தால் மட்டுமே, அங்கு சாலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து செம்பாக்கம் கிராம மக்கள் கோரிக்கையின் பேரில்,  திருப்போரூர் வனச்சரகம் சார்பில் செம்பாக்கம் கிராம இணைப்பு சாலை அமைக்க,  சான்று வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட  வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா நேற்று செம்பாக்கம் கிராமத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ள சாலையை பார்வையிட்டார். அவருக்கு கிராம மக்கள்  சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், செம்பாக்கம் கிராம மக்கள்  சார்பில் வனப்பகுதிக்கும், வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தல் இல்லாமல்  பாதுகாப்பு அளித்து வருவது குறித்து, மாவட்ட வன அலுவலரிடம்  எடுத்துரைக்கப்பட்டது.இதையடுத்து வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள 400  மீட்டர் சாலையை பார்வையிட்ட வன அலுவலர், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று  வனத்துறை சார்பில் ஆட்சேபணையில்லா சான்று வழங்கப்படும் என்றும், அவ்வாறு  வழங்கியதும் சாலை அமைத்துக் கொள்ளலாம் என உறுதியளித்தார்.

Tags : Sembakkam Forest Department Road ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...