×

மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் சோழிபொய்கை குளக்கரையில் மரக்கன்றுகள் நடும்விழா

காஞ்சிபுரம், அக்.1: காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி சார்பில் சோழிபொய்கை குளக்கரையில் மரம் நடுவிழா நடைபெற்றது. மல்லை நீர்நிலைகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சேகர் முன்னிலை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் சோழிபொய்கை குளக்கரையில் மரக்கன்றுகளை நட்டனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடவேண்டியதன் அவசியம் குறித்தும், மழை வர மரம் வளர்க்க வேண்டும். எதிர்கால சந்ததியை பாதுகாக்க மரம் நடவேண்டும். குளக்கரையில்  மரம் நடுவதன்முலம் மண் அரிப்பு தடுக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மல்லை நீர்நிலைகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் கிட்டு, ஆலோசகர் கிருஷ்ணராஜ், வக்கீல் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Tree Planting Ceremony ,Mamallapuram ,Thanalakshmi Srinivasan College ,
× RELATED மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம்...