×

தென்காசியில் 90 மி.மீ மழை பதிவு

நெல்லை, அக். 1: நெல்லை மாவட்டத்தில் கடந்த கார் பாசனத்தின் போது அணைகளில் போதிய அளவு நீர் இல்லாததால் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட முடியவில்லை. இதன் காரணமாக இரு மாவட்டங்களிலும் குளம் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டது.  சங்கரன்கோவில், சிவகிரி, பனவடலிசத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், மானூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்றது. இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கினாலும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு துவங்கிய மழை அதிகாலை 6 மணி வரை விடிய, விடிய கொட்டியது. இதில் தாழ்வான பகுதி மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): பாபநாசம் 17 மி.மீ, சேர்வலாறு 31, மணிமுத்தாறு 14, கடனாநதி 21, ராமநதி 60, கருப்பாநதி 54, குண்டாறு 40, நம்பியாறு 5, கொடுமுடியாறு 20, அடவிநயினார் 32, அம்பை 23, ஆய்க்குடி 70.40, சேரன்மகாதேவி, 30, நாங்குநேரி 11, பாளை 17, ராதாபுரம் 12, சங்கரன்கோவில் 65, செங்கோட்டை 49, சிவகிரி 72.20, தென்காசி 90, நெல்லை 20 மிமீ. மணிமுத்தாறு, பாபநாசம், பச்சையாறு கடனாநதி, கோதையாறு, குண்டாறு உள்ளிட்ட அணைகட்டுகள் மற்றும் நீர்பிடிப்பு  பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்ததால் நீர்மட்டம் சற்று  அதிகரித்துள்ளது.

Tags : Tenkasi ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...