×

சாம்பவர் வடகரையில் தண்ணீர் தொட்டியின் கீழ் இயங்கும் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகம்

சுரண்டை அக்.1: சாம்பவர்வடகரையில் தண்ணீர் தொட்டியின் கீழ் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகம் செயல்படுவதால் அலுவலகத்தை கண்டுபிடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கடையநல்லுர் தாலுகாவிற்குட்பட்ட சாம்பவர்வடகரை மொழி வாரி மாநிலமாக பிரிக்கப்படும் முன்பு கேரளா மாநிலத்தின் எல்லையாக திகழ்ந்துள்ளது. 1953ம் ஆண்டு கேரள அரசால் சாம்பவர்வடகரையில் பிறப்பு,இறப்பு அலுவலகத்தை அப்போதைய கேரள முன்சீப் திறந்து வைத்துள்ளார். பிறப்பு, இறப்பு அலுவலகம் கட்டி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற சூழ்நிலையில் உள்ளதால் தமிழக அரசிடம் புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை புதியகட்டிடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை. இந்நிலையில் ஆங்காங்கே கட்டிடம் பெயர்த்து கீழே விழுந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக தண்ணீர் தொட்டியின் கீழ் பிறப்பு, இறப்பு அலுவலகம் சிறிய அளவிலான அறையில் செயல்படுகிறது. தண்ணீர் தொட்டியின் கீழ் செயல்படுவதால் பொது மக்களால் அலுவலகத்தை தேடி கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் சிறிய அறை என்பதால் அலுவலக பயன்பாட்டிற்கும் தேவையான அளவில் அலுவலகம் இல்லை. எனவே தமிழக அரசு பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு உடனடியாக புதிய பிறப்பு, இறப்பு அலுவலகம் கட்டித்தரவேண்டும் என சாம்பவர்வடகரை திமுக இளைஞர் அணி சார்பில் முத்து மற்றும் பொதுமக்கள், கலெக்டர் மற்றும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Birth ,Death Registration Office ,Champawar North ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா