×

உலக ரட்சகர் திருத்தலத்தில் ரூ.65 லட்சம் மதிப்பில் மணிக்கூண்டு கட்ட அடிக்கல்

திசையன்விளை, அக்.1:  திசையன்விளை உலக ரட்சகர் திருத்தல வளாகத்தில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய மணிக்கூண்டு அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
திசையன்விளை உலக ரட்சகர் திருத்தல ஆண்டு திருவிழா கடந்த 10 நாட்களாக வெகு விமரிசையாக நடந்தது. 10ம் நாள் திருவிழாவில், திருத்தல வளாகத்தில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய மணிக்கூண்டு அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பங்குத்தந்தை ரெமிஜியுஸ் லியோன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் ஜெபம் செய்து அடிக்கல் நாட்டினார். விழாவில் பங்கு மேய்ப்பு பணிக்குழுவினர், அருட்சகோதரிகள், அன்பியங்கள் மற்றும் இறைமக்கள் கலந்து கொண்டனர்.
Tags : Circle ,World Savior ,
× RELATED புயலின் வெளிவட்டம் கரையை தொட்டதால்...