×

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை கோரி கடையம் பகுதி கிராமங்களில் கருப்பு கொடி

கடையம், அக். 1:  உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிடக்கோரி கடையம் அருகே கிராமத்தில் கருப்புகொடி ஏற்றப்பட்டது.
பள்ளர், குடும்பர் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி நான்குநேரி சட்டமன்ற தொகுதி தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அப்பகுதியிலுள்ள அரியகுளம், உன்னங்குளம், இளையார்குளம், காக்கைகுளம், கடம்பன்குளம், ஆயர்குளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
இதற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக அரசு உடனே அரசாணை வெளியிட வலியுறுத்தியும் கடையம் அடுத்த கல்யாணிபுரத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. இதே போன்று கடையம் அடுத்துள்ள மந்தியூர், ராஜாங்கபுரத்தில் மருதம் பேரவை சார்பில் கருப்பு கொடி ஏற்றபட்டது.

Tags : area ,villages ,Kadayyam ,Devendrakula Vellar ,government ,
× RELATED கோவையில் யானை மந்தைகளுடன் குட்டியானையை சேர்க்க முயற்சி!!