×

மோடி உயிருக்கு ஆபத்து என பொய் புகார் அளித்த பாஜ பிரமுகர் கைது

சென்னை: சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ‘‘பிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து,’’ என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். போலீசார், அந்த எண்ணை வைத்து விசாரித்தபோது, திருவான்மியூரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டது தெரிந்தது.

அவரை, காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அவர் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பிரிவு பாஜ மாவட்ட செயலாளர் என தெரியவந்தது.
அப்போது, அவர், ‘‘ராஜிவ்காந்தியை கொலை செய்தது போல மோடியையும் கொலை செய்வோம், என ஒருவர் செல்போனில் பேசியதை பார்த்து, காவல் நிலையத்திற்கு முன்கூட்டியே தகவல் கொடுத்துவிடுவோம் என்ற அடிப்படையில்தான், நான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தேன்.
ஆனால், அவர் யார் என எனக்கு அடையாளம் தெரியாது. மற்றபடி இதுபற்றி எனக்கு வேறு எதுவும் தெரியாது,’’ என கூறினார். இதையடுத்து, ஆதாரம் இல்லாமல் பொய் புகார் அளித்த பாஜ பிரமுகரை போலீசார் கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : BJP ,Modi ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு