பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது.  திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா, ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சி.என்.சண்முகம், கிழக்கு ஒன்றிய செயலாளர் பி.பழனி ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஏ.ஆர்.டி.உதயசூரியன், டி.எம்.சுகுமார், வி.வினோத்குமார், கே.வி.லோகேஷ், ஜே.மோகன்பாபு, வே.ஆனந்த்குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர்கள் மே.தி.ராமச்சந்திரன், ஏ.ஜெ.மாறன், ஏ.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர்.

முகாமில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் வேணு, இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் ஆகியோர் வழங்க இளைஞரணி நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.  மாவட்ட பொருளாளர் கே.சத்தியராஜ், பொதுக்குழு உறுப்பினர் எம்.ரகு, பேரூராட்சி செயலாளர்கள் டி.ஆர்.கே.பாபு, எம்.ஜே.ஜோதிக்குமார், நிர்வாகிகள் எஸ்.ஆர்.ரவி, கே.சீராளன், சி.எம்.ரவி, எம்.கே.சுப்பிரமணி, சி.சுப்பிரமணி, எஸ்.ஆர்.செங்குட்டுவன், டி.வெங்கடாச்சலம், சிலம்பு ஏ.பன்னீர்செல்வம், கோவிந்தசாமி, சி.பி.புருஷோத்தமன், பி.வி.கதிரவன், மோகன், ஏ.எம்.கோவிந்தசாமி, அச்சுதன், ரமேஷ், எம்.அன்பு, என்.சிவா, என்.அபி, வி.பரமசிவம், டி.டி.அழகிரி, டி.ஹரிஷ், என்.குமார், கே.ஏழுமலை, விவேகானந்தன், என்.நவீன், பி.மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருத்தணி:  திருத்தணி நகர இளைஞரணி சார்பில் திமுக நகர செயலாளர் எம்.பூபதி தலைமையில் நடைபெற்ற முகாமில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், துணை அமைப்பாளர் வி.வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, நகர இளைஞரணி அமைப்பாளர் ம.கிரண் அனைவரையும் வரவேற்று பேசினார். திருவள்ளுர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, மாநில இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் புதிய உறப்பினர்கள் சேர்க்கை படிவங்களை வழங்கி முகாமை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் திருவாலாங்காடு ேமற்கு ஒன்றிய திமுக செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன், நகர அவைத் தலைவர் மு.நாகன், வழக்கறிஞர் வி.கிஷோர் ரெட்டி, நகர நிர்வாகிகள் சீனிவாசன், ராமன், ஜி.எஸ்.கணேசன், விஜயா கஜேந்திரன், ஷியாம் சுந்தர், அசோக்குமார், மோகன்ராவ் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Stories:

>