×

திருவள்ளூர் மாவட்ட தமாகா புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

ஆவடி:  திருவள்ளூர் தெற்கு, வடக்கு மாவட்ட தமாகா சார்பில் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம்  திருமுல்லைவாயலில் நடந்தது. திருவள்ளூர் தெற்கு, வடக்கு மாவட்ட தமாகாவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் விக்டரி மோகன், கும்மிடிப்பூண்டி சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட புதிய பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்ட திருவேங்கடம், வழக்கறிஞர் வேல்முருகன், சுகுமாரன், பழனி, சம்பத்குமார் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். மேலும், உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதில் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் ராமன், மாநில பொதுச்செயலாளர் எஸ்ஆர்கே.மனோகரன், மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் கே.எஸ்.தியாகராஜன், வேப்பம்பட்டு அன்பழகன், விவேகானந்தன், மாரிமுத்து, அசோகன், ஆத்தூர் தாஸ், லோகநாதன், அமித்பாபு, தியாகராஜன், செந்தில், சிவகுமார், முத்துரங்கம், முல்லை விஸ்வநாதன், எல்ஐசி மனோகர், முல்லை லட்சுமிபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvallur District ,Tamaka New Trustees Meeting ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை...