×

பூச்சிஅத்திபேடு கொசஸ்தலை ஆற்றில் கழிவு பிளாஸ்டிக் பொருட்களை கொட்டும் தனியார் நிறுவனங்கள் : கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை

ஊத்துக்கோட்டை :  பூச்சிஅத்திபேடு கொசஸ்தலை ஆற்றில் பிளாஸ்டிக், குப்பைகளை கொட்டும் தனியார்  நிறுவனங்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் அருகே பூச்சி அத்திப்பேடு, திருக்கண்டலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில்  தனியாருக்குச் சொந்தமான 100க்கும்  மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிச்சாலைகளில் மிஞ்சிய உணவுப்பொருட்கள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவைகளை சேகரித்து அந்தந்த தொழிச்சாலையின் ஊழியர்கள் அருகில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கொட்டுகிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது.  எனவே கழிவுகளை கொசஸ்தலை ஆற்றில் கொட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறிதாவது  :
 
பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில், இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து சேரிக்கும் மக்கும், மக்காத கழிவு பொருட்களை லாரிகளில் எடுத்து வந்து கொட்டப்படுகிறது. அந்த குப்பை கழிவுகளால் நோய் பரவும் வாய்ப்புள்ளது. மேலும் வருவது மழை காலம் என்பதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ள நீரில் கலந்து விடும். இதனால் மழைநீர் மாசடையும். மாசடைந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு விதமான நோய் தாக்குதலுக்கு உள்ளாவார்கள்.  எனவே சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆற்றங்கரையில்  கழிவு குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : companies ,river ,Kosasthalai ,
× RELATED 127 ஆண்டுகளுக்குப் பிறகு கோத்ரேஜ் குழுமம் இரண்டாகப் பிரிந்தது