×

நல்லூர் சுங்கச்சாவடியில் சோதனை போலி நம்பர் பிளேட் எடுத்து வந்த வேன் பறிமுதல் : டிரைவர் உள்பட 3 பேரிடம் விசாரணை

புழல், அக்.1: செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் 10க்கும் மேற்பட்ட நுழை வாயில் உள்ளது. இதன் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.  இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் தண்ணீர் கேன் ஏற்றிக் கொண்டு மினி வேன் ஒன்று வந்தது. டிரைவரிடம் கட்டணம் செலுத்துமாறு சுங்கவாடி ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால், தங்களிடம் பாஸ் இருப்பதாக வேன் ஓட்டுநர் கூறினார்.

சந்தேகமடைந்த ஊழியர்கள் வேனை சோதனை செய்தனர்.  இதில், வெவ்வேறு எண்களில் 6 நம்பர் பிளேட்கள் இருப்பது தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் வந்த சோழவரம் போலீசார், போலி நம்பர் பிளேட்டுகள் எடுத்து வந்ட வேனை பறிமுதல் செய்தனர். ேமலும்,  வேன் ஓட்டுநர் சுரேந்தர், சுரேஷ், கார்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : persons ,Nallur ,
× RELATED கே.கே.நகரில் திமுக சார்பில் வழங்கிய...