×

தனியார் வங்கியில் இருந்து ஆன்லைன் மூலம் 3.80 லட்சம் மோசடி : பெங்களூரு பெண் உட்பட 3 பேர் கைது

திருவள்ளூர்: ஆன்லைன் மூலம் பெண்ணின் வங்கி கணக்கில் இருந்த சேமிப்பு  ரூ.3.80 லட்சம் பணத்தை, அவருக்கு தெரியாமலேயே எடுத்த பெங்களூருவை சேர்ந்த பெண் உட்பட மூவரை, திருவள்ளூர் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளுர் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(52). இவரது மனைவி லக்ஷ்மி(47). இவர், திருவள்ளூர் நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில், இவரது வங்கி கணக்கில் இருந்து, அவருக்கு தெரியாமலே ரூ.3,79,510த்தை அடையாளம் தெரியாத நபர்கள் ஆன்லைன் மூலமாக கடந்த மாதம் எடுத்தனர்,  இதுகுறித்து, வங்கியில் சென்று கேட்டதற்கு, ஆன்லைன் மூலம் தங்களது சேமிப்பு பணம் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளதை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து பணத்தை இழந்த லக்ஷ்மி திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அரவிந்தனிடம் புகார் கொடுத்தார். இந்த புகார் மனுமீது உடனடியாக திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிந்து, விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க மணவாளநகர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், டவுன் எஸ்.ஐ., சக்திவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து தனிப்படை போலீசார், சைபர் கிரைம் பிரிவின் உதவியோடு வங்கி கணக்கிலிருந்து இணையவழி மூலமாக மோசடியாக பணத்தை எடுத்த நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கள்ளத்தனமாக பணம் பரிமாற்றம் செய்த நபர்களின் வங்கி கணக்கு, அவர்களின் தொலைபேசி எண் ஆகியவற்றை ஆய்வு செய்ததில், குற்றவாளிகள் பெங்களூருவில் தங்கியிருப்பது தெரிந்தது. தொடர்ந்து பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார், அங்கு குற்ற செயலில் ஈடுபட்ட பெண் லாலோம்கிமி (எ) எஸ்தர்(30), பிரமேஷ் குருங்(28), கௌதம் கிம்ரே(35) ஆகிய மூவரை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : bank ,Bangalore ,
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...